Saturday 6 December, 2008

ஒரு ஒற்றை புளியமரத்திற்கு அப்பால்
சூரியன் தன் இன்றைய மரணத்தை
நோக்கி பயணப்படிருந்த பொழுதில்
இரு அணில்கள் விளையாடிக்கொண்டே
மாநகரப்பேருந்து போல்
மரத்தின் கிளைகளுக்கும் தரைக்குமாய்
ஓடிக்கொண்டிருந்ததை ரசித்துகொண்டிருந்தேன்
என்னை சந்திக்க வந்த நீ
நம் பிரிதலுக்கான ஒப்பந்தத்தோடு
வந்திருக்கிறாய் என்றறியாமல்
பேச எத்தனித்த போது
சற்றும் சலனமின்றி நாம் பிரிந்து விடுவோம் என்றாய்
ஏதுமறியாது ஏனென்றேன்
ஆயிரமாயிரம் காரணங்கள் கூறினாய்
இரண்டு வருடங்களுக்கு முன்
என்னிடம் காதலை கூறும்போது
எவ்விதமான காரணங்களும் இல்லாமல்
வருவதுதான் காதல் என்றாயே
முறிந்தது காதலும் ரசனையும் .



2 comments:

Mohan R said...

ஒரு ஒற்றை புளியமரத்திற்கு அப்பால்
சூரியன் தன் இன்றைய மரணத்தை
நோக்கி பயணப்படிருந்த பொழுதில்

அழகான வரிகள்

குமரை நிலாவன் said...

நன்றி இவன்.