Thursday 16 December, 2010

வானம் பார்த்த பூமி

ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஏற்ப்படும் உணவுப் பற்றாக்குறையை மற்றநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவந்தன ஆனால் இப்போது பணக்கார நாடுகள் பல ஏழை நாடுகளில் நிலங்களை வாங்கி பயிர்செய்து தங்களது நாட்டிற்க்கு கொண்டு செல்கின்றன . சில நாடுகள் தங்களுக்கு தண்ணீர் வசதிஇல்லாத வரண்டநிலமாக இருந்ததாலும் பரவாயில்லை என்று நிலங்களை வாங்கி அடி ஆழத்திலிருந்து நிலத்தடிநீரை உறிஞ்சி எடுத்து பயிர் செய்துகொள்ள ஆயத்தமாகி அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றன . இது எல்லாம் உலக அளவில் நடக்க ஆரம்பமாகி இருக்கும் உணவு யுத்தம் .

ஆனால் நம்ம ஊரில் பல கிராமங்களில் உள்ள நிலங்களை ஆயிரம் ஏக்கர் , ஐந்நுறு ஏக்கர் என்று பல பெரிய நிறுவனங்கள் வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றன.நான் மேலே சொன்னது நம்மூரிலும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன .உலக அளவில் பணக்கார நாடுகள் இங்கே பணம்படைத்த நிறுவனங்கள் . வரும் காலங்களில் கார்ப்பரேட்டே நிறுவனங்கள் கூட விவசாயத்துறையில் இறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை .

டிஸ்கி : ரெம்ப நாளைக்கு அப்புறம் பதிவு எழுதிருக்கிறேன் பதிவ படிச்சிட்டு குறைய நிறைய சொல்லுங்கள் திருத்திக்கிறேன்