Friday 12 June, 2009

ஜாதிகள் இல்லையடி பாப்பா ?

நீண்ட நாட்களாக என்னுள் எழுந்த ஒரு கேள்வி ஜாதிகள் இல்லையடி பாப்பா இந்த வரிகள் பாடப்புத்தகத்தில் மட்டும் தான் இருக்கிறது பள்ளிக்கூடத்தில் கூட ஜாதிகள் இல்லை என்ற நிலைமை இல்லை .மாணவர்களுக்கு யூனிபாம் எதற்காக கொடுக்கப் படுகிறது எல்லோருமே சரிசமம் என்பதை மாணவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் .இது எல்லா விசயத்திலும் கடைபிடிக்கப்படுவதில்லை .மாணவர்களுக்கு மாணவர்களாக இருக்கும் வரை அவர்களுக்கு ஜாதிகள் தெரிவதில்லை . அவர்களிடம் ஜாதிச் சான்றிதல் கேட்கும் போதுதான் ஜாதியே தெரிய வருகிறது

ஜாதி ஒழிப்பை சமுதாயத்தில் தொடங்கியதற்குப் பதில் பள்ளிகளில் தொடங்கியிருந்தால் இருந்தால் இன்று ஜாதியே இருந்திருக்காது என்பது எனது கருத்து . கலப்புத்திருமணங்களால் ஜாதிப் பாகுபாடு ஒழித்துவிடலாம் என்று சொல்லுகிறோம் ஆனால் கலப்புத்திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் குழந்தைககுக்கு கூட ஜாதி சான்றிதல் இங்கு கேட்கப்படுகிறது .

மாணவர்கள் மத்தியில் சில விஷயங்கள் ஜாதிப் பாகுபாடை ஏற்ப்படுத்துகிறது என்றே எனக்கு தோன்றுகிறது . அதற்கு ஒரு உதாரணம் பத்தாவதோ ,பனிரெண்டாவதோ முடித்தபின் அவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு . இரண்டு மாணவர்கள் இருக்கிறார்கள் இருவரும் வெவேறு ஜாதியை சேர்ந்தவர்கள் வசதி என்று பார்த்தால் இரு வருடயதும் சமமே .மதிப்பெண் அடிப்படையில் இருவரும் சமமே .ஆனால் ஒருவருக்கு மட்டும் ஜாதி அடிப்படையில் மருத்துவத்துரையோ , பொறியியல் துறையோ கிடைத்து விடுகிறது மற்றொரு மாணவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள் .அதற்காக இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல வரவில்லை நான் . இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் இருக்கிறது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை .

இதற்கு எல்லாம் என்ன தீர்வு எதோ எனக்கு தெரிந்த தீர்வை முன்வைக்கிறேன் பள்ளியில் இருக்கும் சான்றிதலில் பிற்படுத்தப்பட்டவர் ,மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ,தாழ்த்தப்பட்டவர் என்று இருப்பது போல் எந்த ஜாதியையும் சாராதவர் என்றும் ஒரு கட்டம் இருக்க வேண்டும் .எந்த சாதியையும் சாராதவர்களுக்கு மற்றவர்களை விட சலுகை அதிகம் இருக்க வேண்டும் . முக்கியமான விஷயம் எந்த ஜாதியையும் சாராதவர் என்று குறிப்பிடுபவர்களின் தாய் தந்தையர் கலப்புத்திருமணம் செய்திருக்கவேண்டும் . இவர்களுக்கு அடுத்த சந்ததியினரும் இதே போல் கடைபிடிக்க நிர்ப்பந்திக்கப்படவேண்டும் .அப்போதுதான் நாளடைவில் ஜாதிகள் இல்லாமல் ஒழிந்துவிடும் என்பது என் கருத்து .

. ஜாதிகள் இல்லையடி பாப்பா இல்லாமலே இருந்திருக்கலாம் .

11 comments:

sakthi said...

ஜாதி ஒழிப்பை சமுதாயத்தில் தொடங்கியதற்குப் பதில் பள்ளிகளில் தொடங்கியிருந்தால் இருந்தால் இன்று ஜாதியே இருந்திருக்காது என்பது எனது கருத்து . கலப்புத்திருமணங்களால் ஜாதிப் பாகுபாடு ஒழித்துவிடலாம் என்று சொல்லுகிறோம் ஆனால் கலப்புத்திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் குழந்தைககுக்கு கூட ஜாதி சான்றிதல் இங்கு கேட்கப்படுகிறது .

உண்மை பெயரளவில் மட்டுமே ஜாதி ஒழிப்பு இங்கு

தேவன் மாயம் said...

குமரை நிலவன்!! நலமா?

முனைவர் இரா.குணசீலன் said...

/சான்றிதலில் பிற்படுத்தப்பட்டவர் ,மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ,தாழ்த்தப்பட்டவர் என்று இருப்பது போல் எந்த ஜாதியையும் சாராதவர் என்றும் ஒரு கட்டம் இருக்க வேண்டும் .எந்த சாதியையும் சாராதவர்களுக்கு மற்றவர்களை விட சலுகை அதிகம் இருக்க வேண்டும் . /

அட நல்லாருக்கு நண்பரே........

Anonymous said...

எல்லா முன்னேற்றமும் வந்த போதும் இதில் மட்டும் இன்னும் எந்த மாற்றமும் இல்லாதது வேதனையே....விண்ணபங்களில் இந்த ஜாதி காலம் நீக்கப்பட்ட அன்று தான் விடியல்...

குமரை நிலாவன் said...

// sakthi said...
ஜாதி ஒழிப்பை சமுதாயத்தில் தொடங்கியதற்குப் பதில் பள்ளிகளில் தொடங்கியிருந்தால் இருந்தால் இன்று ஜாதியே இருந்திருக்காது என்பது எனது கருத்து . கலப்புத்திருமணங்களால் ஜாதிப் பாகுபாடு ஒழித்துவிடலாம் என்று சொல்லுகிறோம் ஆனால் கலப்புத்திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் குழந்தைககுக்கு கூட ஜாதி சான்றிதல் இங்கு கேட்கப்படுகிறது .

உண்மை பெயரளவில் மட்டுமே ஜாதி ஒழிப்பு இங்கு//

உண்மைதான் சக்தி
வருகைக்கு நன்றி

குமரை நிலாவன் said...

// thevanmayam said...
குமரை நிலவன்!! நலமா?//

நலம் தேவா சார்

குமரை நிலாவன் said...

// முனைவர்.இரா.குணசீலன் said...
/சான்றிதலில் பிற்படுத்தப்பட்டவர் ,மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ,தாழ்த்தப்பட்டவர் என்று இருப்பது போல் எந்த ஜாதியையும் சாராதவர் என்றும் ஒரு கட்டம் இருக்க வேண்டும் .எந்த சாதியையும் சாராதவர்களுக்கு மற்றவர்களை விட சலுகை அதிகம் இருக்க வேண்டும் . /

அட நல்லாருக்கு நண்பரே........//

வாங்க குணா சார்
முதல் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி

குமரை நிலாவன் said...

//எல்லா முன்னேற்றமும் வந்த போதும் இதில் மட்டும் இன்னும் எந்த மாற்றமும் இல்லாதது வேதனையே....விண்ணபங்களில் இந்த ஜாதி காலம் நீக்கப்பட்ட அன்று தான் விடியல்...
//

உண்மைதான் தமிழரசி

வருகைக்கு நன்றி

Sinthu said...

உங்கள் கருத்து நல்லது தான், ஆனால் சாதி என்பது மறையும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை அண்ணா,, எவ்வளவு நாலாகப் பார்க்கிறோம், முன்னைய காலத்தில் இருந்த வேறுபாடு இன்னும் மாறவில்லையே,.,,

Prapa said...

இந்த உண்மையெல்லாம் யாருக்கையா புரியுது ??
நம்ம பக்கமும் வாங்க,.

"உழவன்" "Uzhavan" said...

சாதிகளை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் பாராட்டுக்குரியது