Monday, 30 March 2009

ஹிந்தி ......

பட்டாம் பூச்சி விருதை வேற கொடுத்துட்டாங்க இனிமே பதிவு போடாம இருந்தா அந்த விருதுக்கு மதிப்பே இல்லாம போயிடும் . (யாரோ சுரேஷ் கிட்ட
சொல்லி இருக்காங்க இப்படிஎல்லாம் உசுப்பேத்தினாதான் அடிக்கடி பதிவு போடுவாங்கன்னு.... இது சும்மா ) இப்ப பதிவுக்கு வருவோம் நான் ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி ரயில்வே டெஸ்ட் எழுத ( நாங்களும் எல்லாம் ட்ரை பண்ணிட்டுதான வந்துருக்கோம் ) செகந்தரபாத் போயிருந்தேன் அங்க ரயில விட்டு இறங்கினதும். ஒரு ஹோட்டல்ல ரூம் போடலாம்னு ஹோட்டல் தேடி போனேன் அங்க ரிசப்சன் பக்கத்துல போனேன் அவங்க எதோ ஹிந்தில கேட்டாங்க நமக்குத்தான் ஒண்ணுமே தெரியாதே ஒன் ரூம் ப்ளீஸ் சொன்னேன் அவங்களுக்கு புரியல போல ஒன்னு ஹிந்தில பேசறாங்க இல்லன்னா தெலுங்குல பேசறாங்க.இங்கிலிஷ்ல பேசினா எதோ பதில் சொல்லி இருக்கலாம் .(அதுக்காக இங்கிலீஷ் எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு யாரும் நினைக்க வேண்டாம் ).அங்க உள்ள மக்களும் ஒன்னு தெலுங்கு பேசறாங்க இல்லன்னா ஹிந்தி பேசறாங்க .
ஒருவழியா ரூம் கிடைச்சி டெஸ்ட் எழுதி முடிச்சாச்சி (எப்படி எழுதினேன்னு கேக்க கூ டாது ) திரும்பி ரயிலில் வந்து கொண்டிருந்தேன் அப்போ என்னோட கம்பாட் மேண்டுல முனு நாலுபேர் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர் அவங்க M C A , M Sc யோ படிச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டேன் . தற்செயலா அவங்க மார்க்சிட்ட பார்க்க நேர்ந்தது அதில் language ல பர்ஸ்ட் தெலுங்கு , செகண்ட் இங்கிலீஷ் , தேர்டு ஹிந்தி என்று இருந்தது . இப்ப என்ன மேட்டருன்னா இப்படி நமக்கும் இருந்திருந்தா நாமளும் படிச்சிருப்போம். ஆனால் அந்த வாய்ப்பு இருந்திருக்கும் ஏன்னா நான் படிச்ச பள்ளியில் ஹிந்தி வாத்தியார் என்று ஒருவர் இருந்தார். பள்ளியில் நான் சேர்ந்த பொது ஹிந்தி சார் ஹிந்தி சார்னு எல்லோரும் சொல்லுவாங்க ஆனா அவர் ஹிந்தி வகுப்பு எடுக்க வில்லை வரலாறும் இங்கிலீஷ் ம்ம் எடுத்தார் அப்புறம் ஏன் ஹிந்தி சார்னு சொல்லுறாங்கன்னு கேட்டேன் அதற்கு ஒருவர் சொன்ன பதில் .

எங்கள் பள்ளி ஒரு மேனஜ்மென்ட் பள்ளி எங்க அப்பா காலத்தில் இருந்து இருக்கிறது ஒரு நேரத்தில் ஹிந்தி கட்டாயப்பாடமாக கொண்டுவரப்பட்ட பொது அவர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் . சில நாளில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்துள்ளது . அதற்கு அப்புறம் ஹிந்தி கட்டாயப்பாடமாக இல்லை அதனால் வரலாறும் இங்கிலீஷ் ம்ம் எடுத்திருக்கிறார் .

இப்ப நான் சொல்ல வரது என்னன்னா நம்ம தமிழ் நாட்டை விட்டு வெளி மாநிலத்துக்கு போனா அந்த மாநிலத்தோட மொழி தெரிந்திருக்க வேண்டும் அல்லது நம் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்
இப்போது நான் இருக்கும் மலசியாவில் தமிழர்கள் ,சீனர்கள் .மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள் அவரவர்களுக்கு தாய் மொழி இருந்தாலும் மலாய் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் .
நம்ம நிலைமை மோசம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினவங்க பிள்ளைங்க எல்லாம் இப்ப ஹிந்தி எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு
எம் .பி ஆவும் மந்திரியாவும் இருக்காங்க ஆனா நாம ... ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் .........

17 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் விருதுக்கு.

நட்புடன் ஜமால் said...

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்காட்டி வேற ஏதோ ஒன்னு!

விடுங்க விடுங்க ...

தேவன் மாயம் said...

எங்கள் பள்ளி ஒரு மேனஜ்மென்ட் பள்ளி எங்க அப்பா காலத்தில் இருந்து இருக்கிறது ஒரு நேரத்தில் ஹிந்தி கட்டாயப்பாடமாக கொண்டுவரப்பட்ட பொது அவர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் . சில நாளில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்துள்ளது . அதற்கு அப்புறம் ஹிந்தி கட்டாயப்பாடமாக இல்லை அதனால் வரலாறும் இங்கிலீஷ் ம்ம் எடுத்திருக்கிறார் .///
உண்மைதான்!!!
ஹிந்தி அவசியமாகவே உள்ளது!!

குமரை நிலாவன் said...

நன்றி ஜமால் அண்ணா

குமரை நிலாவன் said...

// ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்காட்டி வேற ஏதோ ஒன்னு!

விடுங்க விடுங்க ...//


உண்மை தான் ஜமால் அண்ணா

குமரை நிலாவன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவா சார்

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள் நண்பா... சுரேஷ் முந்திக்கிட்டாரு.. நான் பட்டாம்பூச்சி விருது கொடுக்க வச்சு இருந்த லிஸ்ட்ல நீங்களும் இருந்தீங்க... எப்படியோ நண்பருக்கு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

பதிவு பற்றி.. ஹிந்தி அவசியமான ஒன்று.. தமிழ்நாடு தாண்டி போனா ஹிந்தி இல்லாம ஒன்னும் பண்ண முடியாது.. நான் கொஞ்சம் லக்கி.. அம்மா என்னை மூன்றாம் வகுப்பிலேயே ஹிந்தி க்ளாஸ்ல சேர்த்து விட்டுட்டாங்க.. அதனால நம்ம அடுத்த தலைமுறைக்கு நாம கண்டிப்பா ஹிந்தி சொல்லி கொடுக்கணும் நண்பா

மகிழ்நன் said...

இநதி அலுவல் மொழிதானேயன்றி தேசிய மொழியல்ல!

மேலும் செய்திகளுக்கு, நேர்மையான விவாதங்களுக்கு

http://vizhithezhuiyakkam.blogspot.com/2009/03/blog-post_31.html

Suresh said...

//இப்ப நான் சொல்ல வரது என்னன்னா நம்ம தமிழ் நாட்டை விட்டு வெளி மாநிலத்துக்கு போனா அந்த மாநிலத்தோட மொழி தெரிந்திருக்க வேண்டும் அல்லது நம் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்
இப்போது நான் இருக்கும் மலசியாவில் தமிழர்கள் ,சீனர்கள் .மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள் அவரவர்களுக்கு தாய் மொழி இருந்தாலும் மலாய் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் .
நம்ம நிலைமை மோசம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினவங்க பிள்ளைங்க எல்லாம் இப்ப ஹிந்தி எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு//

mothail valthukkal ungalukku

thodranthu eluthunga unga eluthu nalla irunthuchu, atha vida unga thanadakkam romba pidichi irunthuchu

neenga sonna athanaiyum unmai hindi hindi yendru avanga pasanga mattum hinid ithai nan oru pathivula solli iruthaen ...
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html
time iruntha padichchu parunga

Apprum unga blog a tamilish.com serunga.. nerya peru padippanga

Tamilmanathulayum serthu vidunga ....seriya

thodranthu eluthunga padikka nanga irukom nilavan

குமரை நிலாவன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
வாழ்த்துக்கள் நண்பா... சுரேஷ் முந்திக்கிட்டாரு.. நான் பட்டாம்பூச்சி விருது கொடுக்க வச்சு இருந்த லிஸ்ட்ல நீங்களும் இருந்தீங்க... எப்படியோ நண்பருக்கு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்..//

நீங்களும் பட்டாம் பூச்சி விருது கொடுக்க நினைத்ததற்கு நன்றி நண்பா
முதல்ல பட்டாம் பூச்சி விருது கொடுக்கலாம்னு இருக்கிறேன்
என்று சுரேஷ் மெயில் பன்னிஇருந்தார்
நான் இல்ல நண்பா இப்ப வேண்டாம் நான் நிறைய பதிவு போட்டதுக்கு அப்புறம்
வாங்கிக்கறேன் என்று மெயில் அனுப்பினேன் அவர் ஒரு பதிவு போட்டு விருது கொடுத்திட்டார்
நானும் சில சந்தேகங்களை அவரிடம் தெளிவுபடித்திக்கொண்டேன் .

குமரை நிலாவன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

அதனால நம்ம அடுத்த தலைமுறைக்கு நாம கண்டிப்பா ஹிந்தி சொல்லி கொடுக்கணும் நண்பா//

கண்டிப்பாக நண்பா

gayathri said...

வாழ்த்துகள் விருதுக்கு.

குமரை நிலாவன் said...

// மகிழ்நன் said...
இநதி அலுவல் மொழிதானேயன்றி தேசிய மொழியல்ல!

மேலும் செய்திகளுக்கு, நேர்மையான விவாதங்களுக்கு//

நன்றி
உங்களுடைய பதிவில் நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன்

குமரை நிலாவன் said...

வாங்க சுரேஷ்
கண்டிப்பாக இணைத்து விடுவோம்

குமரை நிலாவன் said...

// gayathri said...
வாழ்த்துகள் விருதுக்கு//

முதல் தடவையா வந்திருக்கிங்க
ரெம்ப நன்றி வருகைக்கு .

பாலாஜி said...

வணக்கம் நிலாவன்,
விருதுக்கு வாழ்த்துக்கள்.

தங்கள் கருத்தை பலர் ஆமோதித்திருந்தாலும் எனக்கு அதில் உடன்பாடில்லை.

அன்று நடந்தது இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தானே தவிர இந்தி எதிர்ப்பு போராட்டம் அல்ல.

உங்களை இந்தி படிக்க வேண்டாம் என்று யாருமே சொல்லவில்லை. தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் இந்தியை கட்டாய பாடமாக்க கூடாது என்பது தான் அன்றைய போராட்டத்தின் கருத்து.

மொழியை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். தாய்மொழி என்பது வெறும் கருத்து பறிமாற்ற ஊடகம் அல்ல. அது உங்கள் உணர்வின் வெளிப்பாடு.

அன்று அந்த போராட்டம் நடக்கவில்லை என்றால் இன்று கன்னடத்திற்க்கு ஏற்பட்ட நிலை தான் தமிழுக்கும்.

பெங்களூரில் கன்னடர்கள் கூட கன்னடம் பேசுவதில்லை. கர்நாடகத்தின் மற்ற பகுதிகளிலும் கூட இந்தியின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கின்றது.

****ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினவங்க பிள்ளைங்க எல்லாம் இப்ப ஹிந்தி எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு
எம் .பி ஆவும் மந்திரியாவும் இருக்காங்க ஆனா நாம ... ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் .........****

இது தமிழ்நாடாக இருந்திருக்காது...

*****அல்லது நம் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்********

நமது நாட்டில் தேசிய மொழி என்ற ஒன்றே கிடையாது. பல மொழிகள் பேசப்படும் ஒரு நாட்டில் அப்படி ஒரு முறை கொண்டுவரவும் இயலாது. 1976 இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தி என்பது நம் நாட்டின் மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்று. அந்தந்த மாநிலங்கள் அவரவர் மொழிகளில் ஆட்சி செய்யலாம்.

மற்ற மொழிகளை படிக்க வேண்டாம் என்பது யாருடைய கோரிக்கையும் அல்ல. ஆனால் தாய்மொழியையும் படியுங்கள் என்பது தான் தமிழுணர்வளர்களின் தாழ்மையான வேண்டுகோள். இன்று தமிழ்நாட்டில் பலர் தமிழ் படிக்காமலேயே வளர்ந்து வருவது தான் இத்த்கைய போராட்டங்களுக்கு காரணம்.

அனைத்து மொழியும் படியுங்கள். தாய்மொழியை நேசியுங்கள்.