நானாக நீ....
ஒரு
தொலைதூர பயணத்திற்காக ரயில்
நிலையத்தில் காத்திருந்த தருணத்தில்
என்னை நோக்கி குழந்தையுடன் வந்த அவள் ...
நான்கு வருடங்களுக்கு முன்
என்னுள் பலமுறை தன் உதடு பதித்தவள்
ஏமாற்றங்களையே அதிகமாக சந்தித்த இதயம்
என்று தெரிந்ததாலோ என்னவோ
என் காதலை சொன்னவுடன் ஏற்றுக்கொண்டவள்
அன்றும் சரி இன்றும் சரி
என் தனிமை இரவுகளின் அமைதியில்
அருகில் இருப்பதும் அவள் நினைவுகள் மட்டுமே
ஆம் அவள் என் அவளே தான் ...
அருகில் வந்த அவள் வழக்கமான
நலம் விசாரிப்புகளுக்குப் பின்
" நான்
இன்றும் உன்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்ற நம்பிக்கையில் தான்
அவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்னையும் உன்னைப்போல் இந்த சமுதாயம்
தனிமையில் வாழ சம்மதித்திருந்தால்
நானாக நீ.... வாழ்ந்திருப்பாய் என்னுள் "
என்று கூறி சட்டென விலகி சென்றாள்.
10 comments:
மிக அருமை......
நல்லா இருக்கு நண்பா.. சொந்த அனுபவம் போல? காதலர் தின வாழ்த்துக்கள்..
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி இவன்
சொந்த அனுபவமெல்லாம்
இல்லைங்க ...
கார்த்திகைபாண்டியன்
நாமலேல்லாம் போயி .....
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிங்க கார்த்திகைபாண்டியன்
"இன்றும் உன்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்ற நம்பிக்கையில் தான்
அவனுடன் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்"
தமிழில் விளையாடியுள்ள கவிதைத்தனம் அற்புதம்.
தொலைதூர நண்பரே உங்கள் கவிதைகளை இன்று தான் நான் தொட்டுக்கொண்டேன்
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிங்க சசி ,சுரேஷ் .
சுரேஷ்
கண்டிப்பாக உங்கள் பதிவுக்கு
வருகிறேன்
நிலாவன் intha verification of comment a konjam settings la irunthu yeduthu vidungal comment poda kashtama iruku he he
arumaiyana pathivu nanbare kandipa sontha anubavam thane he he
உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி
முடிஞ்ச தமிழிச்ல ஒரு வோட்டு போடுங்க , யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
புதிய பதிவு போடலயா?
தங்கள்
வருகைக்கு நன்றி!!
Very nice poem...
But cosmetic words are required to feel completely..
Post a Comment