Friday, 10 April 2009

தமிழனென்று சொல்லடா ....

தலைநிமிர்ந்து நில்லடா ....



ஒரு இனத்தையே அழிக்கத் துடிக்குமொருவனின்
கைக்கூலியாக மாறிப்போன
கருணா ஒரு தமிழன் ...
போராட்டங்களின் மூலமாவது தம் இனம்
அழிவதை தடுக்க வேண்டும் என்ற நன்பிக்கையில்
போராடிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில்
இன்னொரு நாட்டின் இறையாண்மையில்
ஓரளவுதான் தலையிட முடியும்
என்று அறிக்கை விடும்
தமிழினத்தின் மூத்த தலைவர்
கருணாநிதி ஒரு தமிழர் ...
சூழ்நிலைக்கைதியாய் இருக்கும் எங்களை
அடிமைகள் என நினைத்து
ஞாயிறுகளில் கூட வெளியே செல்ல
அனுமதி மறுக்கும் எங்கள்
முதலாளி ஒரு தமிழர் ...
இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு
இருக்கும் நானும் ஒரு
தமிழனென்று .....
எப்படி பெருமைப்பட்டுக் கொள்ள ...


இயலாமையின் வெளிப்பாடு



9 comments:

SASee said...

நிலாவன் அவர்களே,

உங்கள் வரிகளில்
தெரிகிறது தமிழன்
தலைவிதி..
இதைச் சொல்லும்
நானுமொரு தமிழன்.

தமிழன் என்று சொல்லிக்
கொள்ள தகுதியே இல்லாத
ஒரு சிலரினால் தான்
தமிழன் தலை விதி தலைகீழாய்
மாறியிருக்கிறது.
இதைச் சொல்லும்
நானு மொரு தமிழன்

முதழில் தமிழன் தனக்குள்
பிளவுபட்டிருப்பதை
மறக்கவேண்டும்
பின் தமிழன் தன்மானத்தோடு
வாழவேண்டும்....
இதைச் சொல்லும்
நானும் ஒரு தமிழன்..!

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒத்துக் கொள்ள வேண்டிய வேதனை.. என்னத்தச் சொல்ல..

குமரை நிலாவன் said...

நீங்கள் சொல்வது உண்மை
சசி

குமரை நிலாவன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
ஒத்துக் கொள்ள வேண்டிய வேதனை.. என்னத்தச் சொல்ல..
//
உண்மை நண்பா
நான் உங்களிடம்
பேசிய விஷயம் பற்றி
யோசித்திர்களா நண்பா
நம்மால் அங்கு சென்று ஒன்றும்
செய்யமுடியாது
இங்க இருக்கிறவங்களுக்கு
ஒரு நம்பிக்கையை கொடுப்போம்

தேவன் மாயம் said...

ஒரு இனத்தையே அழிக்கத் துடிக்குமொருவனின்
கைக்கூலியாக மாறிப்போன
கருணா ஒரு தமிழன் ///

உண்மைதான்!!
என்ன செய்வது?

sakthi said...

ungal valigal ingu varthaigalaga

nalla pathivu nilavan

thodarnthu eluthungal

தேவன் மாயம் said...

உலகம் முழுவதும் உழைக்கும் இனம் தமிழினம்!! கறுப்பின மக்களுக்குக்கிடைத்த உரிமை தமிழருக்கு கிடைக்கவில்லையோ?

குமரை நிலாவன் said...

//sakthi said...
ungal valigal ingu varthaigalaga

nalla pathivu nilavan

thodarnthu eluthungal//

எழுத முயற்சி செய்கிறேன்

குமரை நிலாவன் said...

//உலகம் முழுவதும் உழைக்கும் இனம் தமிழினம்!! கறுப்பின மக்களுக்குக்கிடைத்த உரிமை தமிழருக்கு கிடைக்கவில்லையோ?//

நானும் அப்படியே நினைக்கிறேன்

தேவா சார்