பதிவர்களுக்கு ....
அன்பான பதிவுலக நண்பர்களுக்கு நான் பதிவு செய்த ஹிந்தி பதிவு பற்றி சில விமர்சனங்கள் எழுந்துள்ளது .அந்த பதிவில் எனக்கு ஏற்பட்ட சின்ன பதிப்பை மட்டுமே எழுதி இருந்தேன்
அதற்கு ஒரு பதிவு நண்பர் ஒரு பதிவு போட்டுள்ளார்
http://vizhithezhuiyakkam.blogspot.com/
அன்பு நண்பருக்கு நான் என்னுடைய பார்வையில் எழுதிய விஷயம் . என்னுடைய மேதாவித்தனத்தை காட்டிக்கொள்ளவோ ,உலக அனுபவத்தை பெற்றுகொண்டவன் என்று பிற்றிக்கொள்ளவோ எழுதவில்லை என்று பணிவாகக் கூறிக்கொள்கிறேன் . நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நான் ஹிந்தி வெறியனுமில்லை தமிழ் தெரிந்திருக்க வேண்டிது இல்லை என்றும் நான் கூறவில்லை . தமிழனாய் பிறந்தால் தமிழ் கண்டிப்பாக தெரிய வேண்டும் . தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயமாக கற்பிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை . தமிழ் கட்டாயமாக கற்பிக்கப் படவேண்டும் . எனக்கு ஹிந்தி படிக்க வாய்ப்பு இருந்தும் அது கிடைக்காமல் போனதே என்ற ஆதங்கத்தில் தான் இந்த பதிவை எழுதினேன் .
ஹிந்தி படிப்பதில் தவறில்லை .ஹிந்தி படித்திருந்தால் நான் அதை செய்திருப்பேன் இதை செய்திருப்பேன் என்றும் சொல்லவில்லை .என்போன்று கிராமத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனியாக எந்த ஒரு மொழியையோ இல்லை வேறு சில பாடங்கள் போன்ற தனிப்பட்ட விஷயங்களையோ கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் குறைவு .இப்படி தனிப்பட்ட விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டுமானால் நாங்கள் அதிகமாக செலவு செய்து பக்கத்தில் இருக்கும் டவுனுக்கு சென்று கற்க வேண்டும் . இது எங்கள் நடைமுறை வாழ்க்கையில் சாத்திய மில்லை . இது எங்களுடைய இயலாமை தான் ஒத்துக்கொள்கிறேன் . இந்த இயலாமை கடைசி வரை இயலாமையாகவே இருக்க வேண்டுமா என்ன .
வேறு மாநிலங்களுக்கோ அல்ல வேறு நாட்டிற்கோ வேலை தேடி செல்லும்போது அந்த மாநிலத்தின் அல்லது அந்த நாட்டின் வழக்கு மொழியை தெரிந்து கொண்டுதான் செல்லவேண்டும் என்றால் இது சாத்தியமில்லை என்பது என் கருத்து . இன்றும் வேறு மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ வேலை செய்யும் நம்மவர்கள் அந்த மாநிலத்தின் அல்லது நாட்டின் வழக்கு மொழி தெரியாமல் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .
நான் எழுதிய ஹிந்தி பதிவு பல கருத்துக்களை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தததில்
எனக்கு சந்தோசமே ...
பி . கு : இந்த பதிவு என்னுடைய சொந்த கருத்துகள் தான்
7 comments:
நீங்கள் உங்க கருத்துக்களை எப்பவும் போல சொல்லுங்க நண்பா.. விவாதங்கள் வரத்து சகஜம்தான்.. அதெல்லாம் கண்டுக்கக் கூடாது..
விவாதங்களை ஏற்றுக்கொள்கிறேன் நண்பா .
இதற்காக கவலைப்படவில்லை . கண்டுகொள்ளவும் இல்லை
என் முந்தய பதிவை விட இந்த பதிவை
நன்றாக எழுதியதாக உணர்கிறேன் நண்பா .
நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நான் ஹிந்தி வெறியனுமில்லை தமிழ் தெரிந்திருக்க வேண்டிது இல்லை என்றும் நான் கூறவில்லை . தமிழனாய் பிறந்தால் தமிழ் கண்டிப்பாக தெரிய வேண்டும் . தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயமாக கற்பிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை . தமிழ் கட்டாயமாக கற்பிக்கப் படவேண்டும் . எனக்கு ஹிந்தி படிக்க வாய்ப்பு இருந்தும் அது கிடைக்காமல் போனதே என்ற ஆதங்கத்தில் தான் இந்த பதிவை எழுதினேன் .///
உங்களுக்கு உள்ள கருத்து சுதந்திரத்தை யாரும் பறிக்க முடியாது!!
//தமிழ் தெரிந்திருக்க வேண்டிது இல்லை என்றும் நான் கூறவில்லை . தமிழனாய் பிறந்தால் தமிழ் கண்டிப்பாக தெரிய வேண்டும் . தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயமாக கற்பிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை//
இது உண்மை மக்களை ஏமாற்றி தமிழ் தமிழ் என்று கூறி இப்போது அவர்கள் பேரன்கள் மட்டும் ஹிந்தியா பேசுறாங்க
உங்கள் கருத்துக்களை கவலையில்லாம்ல் பதியுங்கள் ... எதிர் கருத்து இருக்கும் கவலை வேண்டாம்
ஒரு பதிவு நல்லா இருந்தா மட்டுமே
அதற்க்கு ஒரு எதிர் பதிவு வரும்... இல்லைனா ஒரு பய கண்டுக்க மாட்டான்
:-) தொடர்ந்து பதியுங்கள் நிலாவன்
உங்களுக்கு உள்ள கருத்து சுதந்திரத்தை யாரும் பறிக்க முடியாது!!
:-) மிக சரி
உங்கள் அயராத பணிகளுக்கு இடையே
எனது பதிவிற்கும் வந்து கருத்து
தந்தமைக்கு நன்றி தேவா சார் .
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சுரேஷ்
அன்பினிய தோழருக்கு வணக்கம்,
நான் உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவிடவில்லை. மாறாக, மாற்று மொழி தொடர்பான எனது கருத்தை பதிவதற்கான தருணமாக இதை கருதிக் கொண்டேன்.
கிராமத்தில் வாழும், படிக்கும் குழந்தைகளுக்கு தம் வறுமை காரணமாக மேட்டுக்குடியினருக்கு கிடைக்கும் வசதிகள் கிடைப்பதில்லை, அதை முதலாளித்துவம் என்றும் அனுமதிக்கப் போவதுமில்லை அதை இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகள் வழிமொழிகிறார்கள்.
நாம் விரும்புவது மொழி குறித்த சீர்திருத்தம் அல்ல புரட்சி. உழைக்கும் மக்களுக்கு அவர்கள் மொழியிலேயே அனைத்து அறிவுசார் செய்திகளையும், பொருளீட்டுவதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் நம் நோக்கம்.
அதற்கு ஆதங்கம் மட்டுமல்ல், கள் உழைப்பும் தேவை, குறிப்பாக உங்களை படித்த இளைஞர்கள், உணர்வுள்ளவர்கள் தேவை.
நிறைய நூல்கள் படியுங்கள், உலக புரட்சிகர வரலாறுகளை வாசியுங்கள், புரட்சி சொற்களில் அல்ல, வாழ்விலும் நிகழ்த்தலாம்.
Post a Comment