இது ஒரு தொடர் பதிவு இந்த தொடர் பதிவை ஆரம்பித்தது
நிலாவும் அம்மாவும் அவர்கள் அவர்களுக்கு என் நன்றிகள் . அதன் பின் எனக்கு தெரிந்து தொடர்ந்தவர்கள்
என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் கார்த்திகை பாண்டியன் அவர்கள் இந்த கேள்விக்கு யோசிக்க வேண்டியது இல்லை மனசுல தோனுனத எழுதுறேன்
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர் .குமாரெட்டியாபுரம் என்பது எனது சொந்த ஊர் அதை சுருக்கி குமரை .நிலாவன் எனக்கு மட்டுமே தெரிந்த நண்பன் என்னை மட்டுமே தெரிந்த நண்பன் . ரெம்ப பிடிக்கும் .
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கண்ணிரில் வெளிப்படும் அளவிற்கு துக்கம் ஏற்படவில்லை .மனதுக்குள்ளே அழுதுக்குவேன்
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து கோழி கிண்டின மாதிரிதான் இருக்கும் ஆனாலும் என்ன விட என்னோட கையெழுத்த யாரும் அழகா எழுத முடியாது அதனால பிடிக்கும் .
4.பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார் ,ரசம் ,வத்த குழம்பு ,இரண்டு வகை கூட்டு,தயிர் இது எல்லாம் பிடிக்கும்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
கொஞ்சநேரம் பேசிப்பார்ப்பேன் விட்டுக்கொடுக்கிற மனசு இருந்திச்சினா நட்பை வைத்துக்கொள்வேன் அப்படி நட்பு வைத்துக்கொண்டால் எந்த நிலையிலும் தொடரனும்னு நினைப்பேன் .
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டுமே பிடிக்கும் ஆனா கடல்தான் அதிக தடவை குளிச்சிருக்கேன் திருச்செந்தூர் கடலுக்குத்தான் அடிக்கடி செல்வதுண்டு . வருடம் ஒரு தடவை எங்கள் ஊரில் இருந்து பாதயாத்திரை செல்வோம் இரவும் பகலும் நடந்து அங்கு சென்றவுடன் கடலில் கால் நனைத்ததும் ஏற்ப்படும் உணர்வு இருக்கிறதே ......
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண் ,உடைகள் .
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது : தன்னம்பிக்கை எங்க அப்பா மாதிரி .
பிடிக்காதது :பல தடவை யோசிச்சி ஒரு செயல செய்து விட்டு மறுபடி மாத்தி செய்கிறது ,அடக்கி வைத்த கோபம் சில நேரங்களில் வெளிப்பட்டு விடுவது.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
வந்த அப்புறம் சொல்றேன் .
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா , அப்பா பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்,அந்த ரெண்டு ஜீவன்களுக்கு பக்கத்துல இருந்து எதையும் செய்ய முடியலைன்னு சொல்ல முடியாத வலியோட இருக்கிறேன் .
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அடர் நீல நிறம் .
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
யாரடி நீ மோகினி திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் .
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
அந்தி வானத்தின் நிறம் ,கடலின் நீல நிறம்
14.பிடித்த மணம்?
மழைத்துளி விழுந்த பிறகு ஏற்படும் மண்வாசனை , மல்லிகை மணம்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
தேவா : எங்க இருந்துதான் தகவல்களை சேகரிப்பார் என்றே தெரியாது அவ்வளவு தகவல்கள் அவரது பதிவில் இருக்கும் .அவர் கொடுக்கும் கவிதை தேநீர் சுவைக்க அருமையாக இருக்கும் . நல்ல மனிதர் .
சிந்துகா : குழந்தைத்தனம் மாறாமல் எழுதக்குடிய நல்ல சகோதரி . பங்களாதேசில் இருந்து எழுதுகிறார் .கவிதை நல்லா இருக்கும் .
ச . ராமானுசம் : அருமையாக கவிதை எழுதுபவர் .நல்ல நண்பர் ,அகழ்வாராய்ச்சி கவிதை எனக்கு பிடித்த கவிதை
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
கார்த்திகை பாண்டியன் அவர்களின் திரைவிமர்சனங்கள் எனக்கு பிடிக்கும் .
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட் . கிரிக்கெட் ,வாலிபால் ,பேட்மிட்டன் எல்லாம் விளையாடுவேன் .
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை .
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மனதை பாதிக்கும் விதத்தில் இருக்கணும் , இல்லைன்னா போரடிக்காம போகனும்
20.கடைசியாகப் பார்த்த படம்?
பூ .
21.பிடித்த பருவ காலம் எது?
கோடைகாலம்
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
காதல் படிக்கட்டுகள், ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர் புத்தகமாக.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்பவாது மாத்துவேன்.
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அதிகாலை இயற்கையின் இசை
நகர வாழ்க்கையின் சத்தம் .
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இப்ப இருக்கிற மலேசியாதான்
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.எல்லாத்தையும் ரசிக்க தெரியும்
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தன்னோட சுயநலத்திற்காக மத்தவங்கலோட சுயத்தில் தலையிடரத என்னால ஏற்றுக்கொள்ள முடியாது.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எப்பவாது என்னுள் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை . இது சரி இல்லீங்க
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
வெளிநாடுகளை சுற்றிப்பார்க்கனும், இந்தியா முழுவதும் சுற்றிபார்க்கனும்னு ஆசை, பார்த்ததில் பிடிச்சது கன்னியாகுமரி.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
சந்தோஷமா இருக்கணும் .
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
கேள்வி நமக்கு செல்லாது
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
சென்றதினி மீளாது மூடரேநீர்
சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!
இது மகாகவி பாரதியார் கூறியது.
முடிந்து போனத விட்டு விடுவோம். நம்மளால முடிந்த அளவுக்கு நல்லதை செய்வோம்.
தேவா
சிந்துகா
ச.ராமானுசம்
17 comments:
சென்றதினி மீளாது மூடரேநீர்சென்றதையே எந்நாளும் சிந்தை செய்துகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டுதின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!
இது மகாகவி பாரதியார் கூறியது.
alagana varigal pakirnthamaiku nandri
ஆனா கடல்தான் அதிக தடவை குளிச்சிருக்கேன் திருச்செந்தூர் கடலுக்குத்தான் அடிக்கடி செல்வதுண்டு . வருடம் ஒரு தடவை எங்கள் ஊரில் இருந்து பாதயாத்திரை செல்வோம் இரவும் பகலும் நடந்து அங்கு சென்றவுடன் கடலில் கால் நனைத்ததும் ஏற்ப்படும் உணர்வு இருக்கிறதே
aam athu oru arumayana unarvu
வாழ்த்துகள் மச்சி, கேள்வி பதில் எல்லாம் அருமையா இருந்தது
கேள்விகளும் அதற்கு தந்துள்ள பதில்களும் அருமையாக இருக்கிறது...
தொடர்ந்து எழுதப் போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்...
சொன்ன மாதிரி பதிவு போட்டாச்சு.. நல்ல பதில்கள்.. நேர்மையா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்
nalla than anser panni iurkega
sakthi
Suresh
gayathri
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிகள்
// வேத்தியன் said...
கேள்விகளும் அதற்கு தந்துள்ள பதில்களும் அருமையாக இருக்கிறது...
தொடர்ந்து எழுதப் போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்...//
உங்களை போன்றவர்கள் என்னோட
பதிவிற்கு வந்தது எனக்கு மிகவும்
சந்தோசம் .
உங்களுக்கு என் நன்றிகள்
//கார்த்திகைப் பாண்டியன் said...
சொன்ன மாதிரி பதிவு போட்டாச்சு.. நல்ல பதில்கள்.. நேர்மையா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்//
உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும்
நன்றி நண்பா
டக்னு நேர்மையா டான் டான்னு பதில் சொல்லியிருக்கீங்க..!
வாழ்த்துக்கள்..!
கொஞ்ச இடங்கள்ல உங்க டேஸ்டும் என்னோடதும் ஒத்துப் போகுது..!
3,8,10,27,32 இந்த கேள்விக்கான விடைகள் நன்றாக இருந்தது....மற்றவை எதார்த்தமான பதில்கள்.........
இப்போது தான் பதிவுலகத்துக்கு வர முடிந்தது.. தாமதத்திற்கு மன்னிக்கவும்
எதோ நெருங்கிய நண்பரின் கேள்வி பதில்களை படித்த மாதிரி ஒரு உணர்வு..
// டக்ளஸ்....... said...
டக்னு நேர்மையா டான் டான்னு பதில் சொல்லியிருக்கீங்க..!
வாழ்த்துக்கள்..!
கொஞ்ச இடங்கள்ல உங்க டேஸ்டும் என்னோடதும் ஒத்துப் போகுது..!//
வாங்க டக்ளஸ்... அண்ணே
இப்பதான் முதல் தடவையா வந்துஇருக்கிங்க
ரெம்ப நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
// தமிழரசி said...
3,8,10,27,32 இந்த கேள்விக்கான விடைகள் நன்றாக இருந்தது....மற்றவை எதார்த்தமான பதில்கள்.........//
நன்றி தோழி
// vinoth gowtham said...
எதோ நெருங்கிய நண்பரின் கேள்வி பதில்களை படித்த மாதிரி ஒரு உணர்வு..
//
முதல் தடவையா வந்துஇருக்கிங்க
ரெம்ப நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
தேவா : எங்க இருந்துதான் தகவல்களை சேகரிப்பார் என்றே தெரியாது அவ்வளவு தகவல்கள் அவரது பதிவில் இருக்கும் .அவர் கொடுக்கும் கவிதை தேநீர் சுவைக்க அருமையாக இருக்கும் . நல்ல மனிதர் .
சிந்துகா : குழந்தைத்தனம் மாறாமல் எழுதக்குடிய நல்ல சகோதரி . பங்களாதேசில் இருந்து எழுதுகிறார் .கவிதை நல்லா இருக்கும் .
ச . ராமானுசம் : அருமையாக கவிதை எழுதுபவர் .நல்ல நண்பர் ,அகழ்வாராய்ச்சி கவிதை எனக்கு பிடித்த கவிதை
Thanks for your appreciation to me.I am seeing this type of Q&A almost in all blogspots. what is this?
Post a Comment