Wednesday, 17 December 2008

முயற்சி ...



வெற்றியின் தேடலில்

ஒவ்வொரு முறை

தோற்கும்போதும்

எங்காவது ஓடிச்சென்று

அழுது திர்த்துவிடுவதென்று

தனி இடம் அமர்கின்ற

மனது

அடுத்த தோல்விக்கு தயாராகிவிடுகிறது .





ஒவ்வொரு சந்திப்பின்
முடிவிலும்
சண்டையோடுதான் பிரிவேன்
நாளைய சந்திப்பை
உன் முத்தத்தோடு
தொடங்குவதற்காக ....

Saturday, 6 December 2008

நட்பு காதல்

நண்பர்களாக இருந்து
காதலர்களானோம்
அப்போதே
நட்பு கலங்கப்படுத்தபட்டுவிட்டது
காதலர்களாக இருந்த நாம்
நண்பர்களாக பிரிந்துவிடுவோம்.
இங்கு
காதலும் நட்பும் கலங்கப்படுத்தபட்டுவிட்டது .


நட்பு காதலாவதிலும் காதல் நட்பாவதிலும்
எனக்கு உடன்பாடில்லை .


ஒரு ஒற்றை புளியமரத்திற்கு அப்பால்
சூரியன் தன் இன்றைய மரணத்தை
நோக்கி பயணப்படிருந்த பொழுதில்
இரு அணில்கள் விளையாடிக்கொண்டே
மாநகரப்பேருந்து போல்
மரத்தின் கிளைகளுக்கும் தரைக்குமாய்
ஓடிக்கொண்டிருந்ததை ரசித்துகொண்டிருந்தேன்
என்னை சந்திக்க வந்த நீ
நம் பிரிதலுக்கான ஒப்பந்தத்தோடு
வந்திருக்கிறாய் என்றறியாமல்
பேச எத்தனித்த போது
சற்றும் சலனமின்றி நாம் பிரிந்து விடுவோம் என்றாய்
ஏதுமறியாது ஏனென்றேன்
ஆயிரமாயிரம் காரணங்கள் கூறினாய்
இரண்டு வருடங்களுக்கு முன்
என்னிடம் காதலை கூறும்போது
எவ்விதமான காரணங்களும் இல்லாமல்
வருவதுதான் காதல் என்றாயே
முறிந்தது காதலும் ரசனையும் .



Tuesday, 2 December 2008

எந்த ஒரு எதிர்பார்ப்புகளிலும்
கடைசி நிமிடம் வரை
காத்திருந்து ஏமாறுவது ஒன்றும்
எனக்கு புதிதல்ல
இன்று உனது திருமணம்
என்ன என்னை மறந்துவிடு
என்றாவது சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்.

Saturday, 29 November 2008

பேராசை

இது
கொஞ்சம் பேராசைதான்
என்றும் அவள் நினைவில்
நான்

மனிதம்

ஜாதி மதம்
மொழி இனம்
என நினைத்து நினைத்து
மனிதம் மறந்த
மானி(இ)டர்களை
என்ன செய்வது

தோல்விகள்

ஏமாற்றங்கள்
நிறைந்த வாழ்க்கையில்
தோல்விகள் கூட
சிம்மசொப்பனம்

சுமை

நான்
வெளியே செல்ல
என்னை என் தந்தையும்
எனது (மரக்)கால்களை
என் தாயும்
சுமக்கிறார்கள்

Thursday, 27 November 2008

அறிமுகம்

எனக்கு எழுத தெரியுமான்னு தெரியல ஆனா என்னாலையும் எழுத முடியும் என்கிற நம்பிக்கையில இந்த பிளாக்கர் உருவாக்கி இருக்கிறேன். இதனை உருவாக்கும் ஆர்வத்தை கொடுத்த நண்பர் நிலாரசிகன் அவர்களுக்கு நன்றி .